பாவக்குட்டையை சுத்தப்படுத்தும்

சூரக்குட்டை

ஸ்ரீகால பைரவர் (மதுராந்தாகம்)

தல வரலாறு

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம், தேரடி வீதி, சுரக்குட்டை, பவர் ஸ்டேஷன் எதிரில், பல ஆண்டுகளாக பல்லவ ராஜாக்கள் காலந்தொட்டு சுமார் ஆறு அடி உயர லிங்கமும், பெரிய நந்தியும் பல ஆண்டுகளாக பூஜைகளின்றி இருந்து வந்தது. ஸ்ரீகாலபைரவர் உபாசகர் ஸ்ரீஉதயகுமார் ஸ்வாமிகள் சிறு வயதிலிருந்தே இந்த தலத்தில் நந்தியின் மேல் அமர்ந்து நண்பர்களுடன் விளையாடி வந்தார். காலங்கள் உருண்டு ஒடின. லிங்கத்தையும், நந்தியையும் ஊர் பெரியவர்கள் ஓன்று சேர்ந்து வடசிற்றம்பலம் முருகர் ஆலயத்தில் தற்பொழுது உள்ள இடத்தில் வைத்தனர். ஏப்ரல் 2007 ஆம் ஆண்டு ஸ்ரீரகோதம ஸ்வாமிகள் மற்றும் பல ஸ்வாமிகள் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீராகவேந்திரர் கோவிலுக்கு சென்றனர். அங்கு விடியற்காலையில் புண்ணிய நதியாம் துங்கபத்ராவில் குளிக்கச் சென்ற பொழுது பல சுவாமிகளும், நதியில் உள்ள கல்லினை எடுத்து பூஜித்தால் பல நன்மைகள் உண்டாகும் என்று சொன்னார்கள். அப்போது ஸ்ரீ காலபைரவ உபாசகரும் ஒரு கல் எடுத்தார். எடுத்த கல் சிற்பி செய்யாத இயற்கையாகவே உருவான சுயம்புவான ஒரு கல் லிங்கம் கிடைத்தது. அதிசயமாக லிங்கத்தின் ஆவுடையார் வெள்ளை நிறமாகவும், பாணம் கருநிறமாகவும் இருந்தது. ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்கிவிட்டு மாலை மீண்டும் துங்கபத்ராவில் சுவாமிகள் குளிக்க சென்றார்கள். உபாசகர் இடுப்பளவு நீரில் குளித்து கொண்டிருந்ந்தபோது அவரது பாதத்தில் ஒரு கல் தடைபட்டது. அதை பக்தியுடன் மூழ்கி எடுத்து பார்த்தபோது இரட்டை நந்தி வடிவிலான ஒரு கல் கிடைத்தது. இதை கொண்டு வந்த நாள் முதல் பழைய சிவனும், நந்தியும் நினைவில் வந்தது.

ஆகவே ஸ்ரீ காலபைரவர் அருளால் கிடைத்த லிங்கத்தையும், நந்தியையும் தாம் புதிதாக அமைக்கப்பட உள்ள ஸ்ரீ அபிராமி உடனுறை பிரம்மேஸ்வரர் () காலபைரவர் சன்னதியின் கருவறையில் மூலவர் லிங்கத்தின் கீழ் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. அனைத்து சிவாலயங்களிலும் மூலஸ்தானத்தில் லிங்கம் ரூபமாக அமைந்திருக்கும். ஆனால் இங்கு அமைய இருக்கும் ஆலயம் இதுவரை எங்கும் அமையாத வண்ணம் 6 அடி லிங்கத்துக்குள், நாய் வாகனமில்லாமல், 5 அடி உயரத்தில் ஸ்ரீகாலபைரவர் உருவமும், எதிர்நந்தி இரட்டை நந்தியாகவும், உபாசகருக்கு கிடைத்த உருவ வண்ணம் அமைக்கப்பட உள்ளது. ஆகையால் இக் கோவிலை நிர்மாணிக்க மெய்யன்பர்களால், சிவனுக்கு தொண்டு செய்ய தங்களால் இயன்ற பொருளுதவி அளித்து ஸ்ரீகாலபைரவருடைய அருளை பெறுமாறு அடியேன் கேட்டுக்கொள்கிறேன்.

 

bairavar front copy.jpg

 

பைரவர் வழிபாட்டால் ஏற்படும் நன்மைகள் :

எந்த ஒரு நல்லகாரியத்ன் நிமித்தம் எவர் ஒருவர் ஸ்ரீகால பைரவரை வழிபட்டாலும் அவர்கள் அதை அடைந்து விடுவார்கள் என்பதில் ஐயம் இல்லை.

வழிபட வேண்டிய காலங்கள்

வளர் பிறை அஷ்டமி - சிறந்த பலன் உண்டு

தேய் பிறை அஷ்டமி - மிக மிக சிறந்த பலன் உண்டு

ஞாயிற்று கிழமை வழிபடும் முறைகள் - மாலை 4.30 முதல் 6.00 மணிக்குள்

பிடித்த மலர் - செவ்வரளிப் பூ அல்லது சிகப்பு பூ

பிடித்த நைவேத்யம் - சிகப்பு அரிசி சக்கரை பொங்கல் அல்லது சிகப்பு அரிசி அவல் பாயாசம்

மிக பிடித்தது - சாம்பிராணி தூபம்

பைரவர் 64 வகைகள் உண்டு அதில் ஸ்ரீ கால பைரவர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர் இப்பொழுது ஸ்ரீ கால பைரவர் குடிசையில் இருந்து அருள் வழங்கி வருகிறார். இங்கு வந்து வழிபட்டு சென்றவர்கள் நிறைய நன்மைகள் அடைந்துள்ளார்கள் ஆலயம் கட்டும் பணிக்கு அவர்களால் ஆன பொருள் உதவி செய்ய முன்வருகிறார்கள் என்பது உண்மை.

அவரின் மகிமைகள் பற்றி அறிய ஸ்ரீ தவத்திரு A.உதயகுமார சுவாமிகள் அவர்களை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன் செல் 9443877706

பஸ் ரூட் : மதுராந்தகம் தேரடிவீதி அருகில் பஸ் நிறுத்தம் சூரக்குட்டை என்ற ஊர் உள்ளது.

 

kalaphoto.jpg

இப்படிக்கு

ஸ்ரீ கால பைரவர் செல்லபிள்ளைகள்

ஸ்ரீ களக்காடு . . மாரிசுப்ரமணியன் செல் : 9840313651

பாபநாசம்  கி. அறிவழகன் செல் : 9626658081